வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை... குமரி மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பு!
கனமழை எதிரொலியாக கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, 2 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே கடலில் 170 கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கனமழையால் கரை திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் திடீர் மழையில் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
குமரி மாவட்டத்தில் மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது இதனால் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. மரங்கள் சாலையில் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதே போன்று இலங்கையிலும் பெய்து வரும் கனமழையால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications