"கொரோனா வைரஸ் கிட்டயே வராது.. அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்".. வைரலாகும் நோட்டீஸ் போர்டு
காரைக்குடி ஹோட்டல் நோட்டீஸ் போர்டு வைரலாகி வருகிறது
Recommended Video
திருவண்ணாமலை: "கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா... சின்ன வெங்காயம் ஊத்தப்பம் சாப்பிடுங்க" என்று நோட்டீஸ் போர்ட்டில் எழுதி வைத்துவிட்டார்கள்.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பி வருகிறது.. இன்னும் மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.. சித்த மருந்து முதல் ஒவ்வொன்றை பலர் குறிப்புகளாக சொல்லி வருகிறார்கள்.
எனினும் எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்குள் 213 பேருக்கு மேல் சீனாவில் இறந்துவிட்டனர்... 8 ஆயிரத்துக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்குடி
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரஸுக்கு பலியாகி உள்ளனர். சீனாவில் ஆரம்பித்து.. டெல்லியில் நுழைந்து கேரளா வழியாக திருவண்ணாமலை வரை இந்த வைரஸ் துரத்தி கொண்டு வந்துவிட்டது. இந்நிலையில், காரைக்குடியில் புகழ்பெற்ற பிரசிடென்ட் என்ற ஹோட்டல் வாசலில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம்
அதில், "கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும்" என்று எழுதி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக ஹோட்டலின் நிறுவனர், ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் "நாங்க 65 வருஷமா இந்த ஹோட்டலை நடத்திட்டு வர்றோம்.. இது ஒரு பாரம்பரியமான ஹோட்டல்.. அடிப்படையிலேயே சின்ன வெங்காயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகும்.

நம்மை தாக்காது
அதேபோல நல்லண்ணெய்யிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. ஆனால் இந்த அருமை இப்போ இருக்கிற இளைஞர்களுக்கு தெரியவில்லை.. அவர்களுக்கு விழிப்புணர்வு தருவதற்காகத்தான் இப்படி ஒரு போர்டை வைத்தோம்.. சின்ன வெங்காயம் நிறைய சாப்பிட்டாலே எந்த வைரஸும் நம்மை தாக்காது" என்றார். இந்த நோட்டீஸ் போர்டினை பலரும் செல்போனில் போட்டோ எடுத்து கொண்டவாறு சென்றனர்.
|
50 ரூபாய் ஊத்தப்பம்
மேலும் சோஷியல் மீடியாவில் இது சம்பந்தமான மீம்ஸ்-ம் வடிவேலுவை வைத்து ரெடி செய்து விட்டனர். அதில் ஒன்றில், "அதாவது உலகமே பார்த்து நடுங்குற கொரோனா வைரஸ் உன் கடைல விக்கிற ரூ.50 ஊத்தப்பம் வாங்கி சாப்டா வராம தடுக்கும் அப்படிதானே" என்று இவர் நக்கலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications