தூய்மையான பள்ளிக்கான மாநில விருது வென்ற காரைக்குடி நகராட்சிப் பள்ளி
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு தூய்மைக்கான பள்ளிக்கான மாநில விருது கிடைத்துள்ளது.
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளிக்கு தூய்மையான பள்ளிக்கான புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பள்ளிகள் விருதுகள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

தொடக்கப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளை அதிக அளவில் தூய்மையாக பராமரித்து வரும் பள்ளிகளுக்கு தூய்மையான பள்ளிக்கான புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன
தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி என்ற திட்டத்தின் கீழ் தூய்மை மற்றும் சுகாதரத்தில் சிறந்து விளங்கும் பள்ளிக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தூய்மையான பள்ளிக்கான புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு 22.09.17 அன்று இந்த விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் திரு. பிரதீப் யாதவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் திரு. ரெ.இளங்கோவன் அவர்கள் முனிலை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநிலத் திட்ட இயக்குநர் திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் மாண்புமிகு தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்களள் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தூய்மையான பள்ளிக்கான புரஸ்கார்விருதினை சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஆ. பீட்டர் ராஜா மற்றும் இப்பள்ளி மாணவி அ. விருக்சா ஆகியோர் இணைந்து பெற்றனர்.
இதே போல் பல்வேறு மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் முனைவர் திரு.ச.கண்ணப்பன் அவர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் முனைவர்.அ.கருப்பசாமி அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.தொடக்கக் கல்வி இயக்குநர் திரு.செ.கார்மேகம் அவர்கள் நன்றி கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications