வஜூபாய் வாலா கர்நாடக ஆளுநரா ? பாஜகவின் ஏஜெண்டா ? வைகோ டவுட்!
கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பாஜக அரசின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார் என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video

நாங்குநேரி : கர்நாடக மாநிலத்தின் ஆளுநரான வஜூபாய் வாலா பாஜக அரசின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். அவரால் நாட்டின் அரசியலமைப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் வெள்ளி விழாவை முன்னிட்டு நாங்குநேரியில் கட்சிக்கொடி ஏற்றும் விழா இன்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகாவில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் பாஜகவை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார். இது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை.
கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். அவரால், அம்மாநிலத்தில் குதிரை பேர ஆட்சிக்கு வழிவகுக்கப்பட்டு, நாட்டின் அரசியலைமைப்புச் சட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இறுதி வரை காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்காமல், நினைத்ததை சாதித்துவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications