காவிரி பிரச்சனை: ஓசூர் ரோடு, பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை தவிர்க்கவும் #cauvery
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் ஓசூர் ரோடு, பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மாண்டியாவில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகள், கன்னட அமைப்பினர் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதற்கிடையே கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நேற்று காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் இன்று அதிகாலையிலேயே போராட்டத்தை துவங்கிவிட்டனர்.
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே இன்றும் பேருந்து போக்குவரத்து இருக்காது. நேற்று தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சென்ற பேருந்துகள் ஓசூரோடு தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டம் நடப்பதால் ஓசூர் ரோடு, பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் முன்னெச்சரிக்கையாக அந்த வழிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓசூர் ரோடு, பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர் மாற்று பாதைகளில் செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications