கர்நாடகம் திறந்துவிட்டும் வராத காவிரி.. கவலையில் டெல்டா விவசாயிகள்
கர்நாடகம் மாநிலம் திறந்துவிட்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேரவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்தவிடப்பட்ட நீர் தமிழகத்திற்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகளில் இருந்து கடந்த வெள்ளிக் கிழமையன்று தமிழகத்திற்கு 3,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
வழக்கமாக கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் 3 நாட்களில் தமிழகத்தை வந்தடையும். ஆனால் இந்த முறை 5 நாட்கள் ஆகியும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடும் வறட்சி
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்து வந்தது.

தென்மேற்கு பருவமழை
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

வெள்ளப் பெருக்கு
இதனால் குடகு மாவட்டத்தில் பாகமண்டலா காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தண்ணீர் திறப்பு
இதனையடுத்து, கேஆர்எஸ் மற்றும் கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அங்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று வரை தமிழகம் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கவலை
டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி கைவிட்ட நிலையில், சம்பா விவசாயத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் காத்திருக்கின்றனர். எனினும் பூமி கடும் வறட்சியை கண்டுள்ளதால் நீரை அதிக அளவில் உறிஞ்சி கொள்வதாகவும் அதனால்தான் தாமதமாகிறது என்றும் விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications