ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு.. கைதான கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு 5 நாள் கஸ்டடி
Recommended Video

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு முறைகேடாக முதலீடு செய்ய அனுமதி வழங்கிய வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமனை அமலாக்கப் பிரிவு 5 நாள் விசாரணைக்கு எடுத்ததுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த 'ஐஎன்எக்ஸ் மீடியா' என்ற தொலைக்காட்சி சேனல் நிறுவனம், ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது.

இதில் விதிமீறல் நடந்துள்ளது, இந்த வர்த்தகத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும், அதற்கு பிரதிபலனாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேலும் பலரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் பாஸ்கரன் ராமனை அமலாக்கப் பிரிவு 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications