Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''அருள்மிகு காங்கிரஸ்''..சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து உணர்ச்சிவசப்பட்ட கார்த்திக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடைசி வரை யாருமே கிடைக்காமல் தொங்கித் துவண்டு போன காங்கிரஸ் கட்சிககு கை கொடுக்க அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் மற்றும் சமூக சமத்துவப் படை தலைவியான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஆகியோர் வந்து சேர்ந்துள்ளனர்.

இருவரும் காங்கிரஸ் கட்சிக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யவுள்ளனர். இந்த ஆதரவை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை நேரில் சந்தித்து அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த சந்திப்பினபோது கார்த்திக் மிகவும உருக்கமாக செய்தியாளர்களிடம் பேசினார். சத்தியமூர்த்தி பவனை அவர் கோவில் போல கருதுவதாகவும் கூறியபோது காங்கிரஸாருக்கே சறறு புல்லரித்துப் போய் விட்டது.

கார்த்திக் பேசியதைக் கேளுங்க...

இது ரொம்ப சோதனையான காலம்

இது ரொம்ப சோதனையான காலம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த தேர்தல், சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு சோதனையான காலம். நாடு நன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். இதை வேறு கட்சிகளால் செய்ய முடியாது.

தனியா நிக்கலாம்.. ஆனா...

தனியா நிக்கலாம்.. ஆனா...

நாங்கள் தேர்தலில் தனியாக நிற்க முடியும். ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்களுக்கு சமஉரிமை, சீனாவைவிட பொருளாதாரத்தில் வளர்ச்சி என்று இந்தியா சாதித்துக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் அறிவுப்பூர்வமான ஆட்சிதான் காரணம். ஆனால், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை மறைத்து சிலர் பொய்யான தகவல்களை கூறுகிறார்கள்.

அப்படியே கோவில் போலவே ஒரு பீலிங்...

அப்படியே கோவில் போலவே ஒரு பீலிங்...

நான் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, கோவிலுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. இந்த கோவிலைவிட்டு வெளியே போகமாட்டேன்.

எஸ்.. வீ கேன் டிஸ்கஸ்...

எஸ்.. வீ கேன் டிஸ்கஸ்...

வேறு கட்சிக்காரர்கள் யாராக இருந்தாலும் என்னுடன் விவாதம் நடத்தலாம். நாட்டின் நலன் கருதி காங்கிரஸ் கட்சி வெற்றிபெற உறுதி ஏற்போம்.

வெளம்பரமே தேவையில்லை

வெளம்பரமே தேவையில்லை

விளம்பரம் இல்லாமல் செயல்படும் கட்சி எங்கள் கட்சி. நாங்கள் நேராக மக்களை சந்தித்து தேவைகளை நிறைவேற்றுவதால், அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளோம்.

தற்பெருமை பேச மாட்டேன்

தற்பெருமை பேச மாட்டேன்

தற்பெருமை பேசுவதில் எனக்கு பழக்கம் கிடையாது. நாங்கள் ஒன்றும் பணக்கார கட்சி இல்லை. ஆனால், மனிதர்களை மதிக்கும் கட்சி, மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றார் கார்த்திக்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+