அண்ண்ண்ணே.... அழகிரிக்குப் போன் போட்டு 'சென்சேஷனலாக' பேசிய 'டொப்பி' கார்த்திக்!
மதுரை: இன்விசிபிள் அரசியல் தலைவரான நடிகர் கார்த்திக் திடீரென மு.க.அழகிரியிடம் பேசி பாசம் பாராட்டியுள்ளார்.
மதுரையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அழகிரி மும்முரமாக பேசிக் கொண்டிருந்தபோதுதான் இப்படி திடீரென போனைப் போட்டு பாசத்தைக் கொட்டியுள்ளார் கார்த்திக்.
மதுரையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அவர்களது கருத்துக்களைக் கேட்டார். பின்னர் இறுதியாக உறுக்கமாக பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் நடிகர் கார்த்திக் தன்னுடன் போனில் பேசியதாக குறிப்பிட்டார் கூட்டத்தினரிடம். அதுகுறித்து அழகிரி கூறுகையில்,இங்கே நான் அமர்ந்திருந்தபோது, நடிகர் கார்த்திக் எனக்கு போன் பண்ணினாரு.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட பிரதமரிடம் வலியுறுத்தியதற்கு எனக்கு நன்றி சொன்னாரு. நான்கூட சும்மா சம்பிரதாயமாக பேசுவாரோ என்று நினைத்தேன். ஆனா, உணர்ச்சிவசப்பட்டு பேசினாரு. அவர் நீண்ட காலமாக என் நண்பராக, விசுவாசியாக இருப்பவர் என்றார் அழகிரி.
அழகிரி இப்படிக் கூறியதும் கூட்டத்தினர் மத்தியில் சின்னதாக ஒரு உற்சாகக் களை காணப்பட்டதாம். ஆதரவு பல பக்கத்திலும் திரண்டு வருவதால் இருக்குமோ....
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications