வரும் 12-ம் தேதி திருகார்த்திகை தீபம்.. அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு
கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் அகல்விளக்குகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
சென்னை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூர் பகுதிகளில் விற்பனைக்காக விளக்குகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகிறார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழா வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்துக்களின் மிகமுக்கிய பண்டிகையான தீபத்திருவிழாவை ஒட்டி 3 நாட்கள் வீடுகள் தோறும் விளக்கேற்றி அலங்கரிப்பார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவில் திருக்கோவில்களிலும், வீடுகளிலும் வரிசையாக அகல்விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுவார்கள்.

களிமண்ணால் செய்யப்பட்டு, வரிசையாக ஏற்றப்படும் விளக்குகள் பார்ப்பதற்கு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடியதாக விளங்குகின்றன. சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் தீப விளக்குகள் விற்பனை செய்கின்றனர்.

குத்துவிளக்கு, தாமரை விளக்கு, ஒருமுக விளக்கு, பூ வடிவிலான விளக்கு, காமாட்சி விளக்கு போன்ற பல்வேறு வகையிலான விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான மண் விளக்குகள் ஒரு ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 200 ரூபாய் வரையிலும் விலை உள்ளது. இந்த விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications