சமூக அக்கறையோடு "ஹெல்மெட்"டைக் கையில் எடுத்த கார்த்திகா!
திருவனந்தபுரம்: மக்களிடையே ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆபரேஷன் ஹெல்மெட் என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார் நடிகை கார்த்திகா.
எண்பதுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதா. இவரது இரண்டு மகள்களும் தற்போது நடிகைகளாக உள்ளனர்.
இவரது மூத்த மகள் கார்த்திகா தமிழில் கோ படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், ஹெல்மெட் விழிப்புணர்விற்காக புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார் கார்த்திகா.

கட்டாய ஹெல்மெட்...
தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த மாதம் முதல் அமலில் உள்ளது. இதையடுத்து அனைவரும் ஹெல்மெட் அணியத் தொடங்கியுள்ளனர்.

ஆபரேஷன் ஹெல்மெட்...
இந்நிலையில், கட்டாய ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருவனந்தபுரத்தில் ‘ஆபரேஷன் ஹெல்மெட்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார் கார்த்திகா.

விபத்து...
தனது அமைப்பு குறித்து அவர் கூறுகையில், "எனது உறவினர்கள் பலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். இதுபோல் எனது பணியாளர்கள் சிலரும் ஹெல்மெட் அணியாமல் இறந்து இருக்கிறார்கள். எனவேதான் சமூக அக்கறையுடன் ‘ஆபரேஷன் ஹெல்மெட்' அமைப்பை தொடங்கியுள்ளேன்.

விழிப்புணர்வு...
இதன் மூலம் மக்களை நேரில் சந்தித்து ஹெல்மெட் அவசியத்தை எடுத்து சொல்வோம். பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் கொடுத்து ஹெல்மெட் அணிய வற்புறுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications