ஆம் ஆத்மியிடம் தமிழக காங். பாடம் கற்கனும்..: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சீண்டும் "கா.சி"!
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளை முன்வைத்து ஆம் ஆத்மியிடம் தமிழக காங்கிரஸ் பாடம் கற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட நாள் முதலே கார்த்தி சிதம்பரம் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். காமராஜரை விமர்சிக்கப் போய் பெரும் பஞ்சாயத்து ஏற்பட்டது.

அதன் பின்னர் ஜி67 என்ற குழுவை உருவாக்கி அது அடுத்த பஞ்சாயத்து ஆனது. காங்கிரஸ் கட்சியை விட்டு ஜெயந்தி நடராஜன் விலகிய போது, மகனும் அப்பாவும் கட்சியை விட்டு போனால் விமோசமனம் கிடைக்கும் என்று இளங்கோவன் கூறியிருந்தார்.
இது தொடர்பாக டெல்லி வரையில் 'கட்டாய பஞ்சாயத்து' நடந்தது. பின்னர் இளங்கோவன், நான் சிதம்பரத்தை குறிப்பிட்டு சொல்லவில்லை என்றார். அதனைத் தொடர்ந்து சிதம்பரத்துடன் சிறிய வேறுபாடு இருந்தது.. அதெல்லாம் சரியாகிவிட்டது என்று சில நாட்களுக்கு முன்னர்தான் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
தற்போது கார்த்தி சிதம்பரம் மீண்டும் இளங்கோவனுடன் மல்லுக் கட்டும் வகையில் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
Lessons from #AAPSweep, no one is invincible, state politics needs a credible leader n an agenda. People want leadership at their doorstep.
— Karti P Chidambaram (@KartiPC) February 10, 2015 டெல்லி தேர்தல் முடிவு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மக்கள் தங்களுக்கான தலைவரை தங்களது அருகில் இருந்தே தேர்வு செய்கின்றனர்.
இதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டியது அவசியம். நமது கட்சியின் மாநில தலைமைக்கு நம்பகமான தலைவரும் கொள்கை ரீதியில் மாறுதலும் தேவை என்று பதிவு செய்துள்ளார்.
இது என்ன பஞ்சாயத்தை உருவாக்குமோ?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications