ஆர்.கே.நகரில் போட்டியிட கங்கை அமரன் மறுப்பு- கரு. நாகராஜன் வேட்பாளர்- தமிழிசை சவுந்தரராஜன்
ஆர்கே நகரில் போட்டியிட கங்கை அமரன் மறுத்ததல் கரு. நாகராஜனை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக கரு. நாகராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுகவின் மருதுகணேஷ், அதிமுகவின் மதுசூதனன், சசிகலா அக்காள் மகன் தினகரன், நடிகர் விஷால், தீபா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் பாஜக சார்பில் யாரை நிறுத்துவது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது. கடந்த முறை போட்டியிட்ட இசை அமைப்பாளர் கங்கை அமரன் இம்முறை போட்டியிட மறுத்துவிட்டார். இதனால் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் பாஜக திணறியது.

இந்நிலையில் கரு. நாகராஜன், ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலராக இருந்தவர் கரு. நாகராஜன். அங்கிருந்து பாஜகவுக்கு தாவி தற்போது ஆர்.கே.நகர் வேட்பாளராகி இருக்கிறார் கரு.நாகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications