கோவில்பட்டியில் வைகோவுக்கு கருப்புக் கொடி காட்டிய நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை-பரபரப்பு!
கோவில்பட்டி: மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அவர் போட்டியிடும் கோவில்பட்டியில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தினர் கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார். இதற்காக அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கோவில்பட்டியில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்க சென்றார். ஆனால் ஒரு கும்பல் அவர் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியது.
இதனால் ஆவேசமடைந்த வைகோ, ஆம்பளையா இருந்தா வாங்கடா என கடும் கோபத்தில் பேசினார். பின்னர் வைகோவை தடுத்தவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று வைகோவுக்கு திடீரென கருப்புக் கொடி காட்டி சிலர் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
வைகோவுக்கு கருப்புக் கொடிகாட்டிய அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் கோவில்பட்டியில் பரபரப்பும் பதற்றமும் நீடிக்கிறது.
உடுமலைப்பேட்டையில் கடந்த மார்ச் மாதம் தலித் இளைஞர் சங்கர் ஜாதி ஆணவக் கொலைக்குள்ளான போது அதை வைகோ கடுமையாக கண்டித்திருந்தார். அப்போதும் கோவில்பட்டியில் அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பினர் வைகோவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications