'அழகிரி பயம்': ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: மூத்த மகன் அழகிரி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இளைய மகனும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, தன்னுடைய இளைய மகன் ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில் இறந்துவிடுவார் என்று அழகிரி கூறியதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் அழகிரி சம்பவத்தை அடுத்து ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரி கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் ஸ்டாலின் மீது நடந்த கொலை முயற்சியை அடுத்து அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமான்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கருணாநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம்












Click it and Unblock the Notifications