பெரியார் - அண்ணாவிற்கும் பாரத ரத்னா விருது: கருணாநிதி கோரிக்கை
சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள கருணாநிதி, பெரியார், அண்ணாதுரை ஆகியோருக்கும் பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து பிரதமர், குடியரசுத்தலைவருக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திராவிட முன்னேற்றக் கழகத்திடமும், குறிப்பாக என்னிடமும் நெருங்கிய அன்பு கொண்டவருமான, இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு "பாரத ரத்னா" விருது வழங்க மத்திய அரசு முன் வந்திருப்பதற்காக நன்றி கூறுவதோடு, விருது பெற்ற தலைவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று 24-8-2014 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் நான் கடிதம் எழுதியிருந்தேன்.
எனவே பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கும் பாரதரத்னா விருது வழங்கி தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை பிரதமர் அவர்களையும், குடியரசு தலைவர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications