91 வயதிலும் மின்னல் வேகம்.. 4 நாட்களில் 10 கூட்டங்களில் பேசுகிறார் கருணாநிதி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது 91 வயதிலும் மின்னல் வேகப் பிரசாரத்தில் குதித்துள்ளார். முதல் கட்டப் பிரசாரத்தை முடித்து விட்ட அவர் அடுத்து 4 நாட்களில் 10 பொதுக் கூட்டங்களில் தனது இரண்டாவது கட்டப் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
முதல் கட்டக் கூட்டங்களில் உருக்கமாகப் பேசிய கருணாநிதி தனது 2வது கட்டப் பிரசாரத்தின்போது 10 பொதுக் கூட்டங்களில் பேசவுள்ளார்.
ஏப்ரல் 5ம் தேதி முதல் கட்டப் பிரசாரத்தை கருணாநிதி தொடங்கினார். 7ம் தேதி சேலத்தில் நடந்த கூட்டத்தோடு அவர் சென்னை திரும்பினார். அடுத்து நாளை தனது 2வது கட்டப் பிரசாரத்தை அவர் தொடங்குகிறார்.
கருணாநிதியின் 2வது கட்டப் பிரசார விவரம்

10ம் தேதி மரக்காணத்தில்
தி.மு.க. தலைவர் கலைஞர் 2-ம் கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 10-4-2014 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் அவர் 10.30 மணிக்கு மரக்காணம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மதியம் 1.30 மணிக்கு புதுச்சேரியில் உள்ள அகார்டு ஓட்டலில் கலைஞர் தங்குகிறார்.

பிற்பகலில் புதுச்சேரியில்
பின்னர், அன்று மாலை 4.30 மணிக்கு புதுச்சேரி அண்ணா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசுகிறார்.

மாலையில் கடலூரில்
மாலை 6 மணிக்கு கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இரவு சிதம்பரத்தில் திருமாவுக்காக...
இரவு 8 மணிக்கு சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கருணாநிதி பேசுகிறார். பின்னர், இரவு 10.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அக்ஷ ரதம் ஓட்டலில் அவர் தங்குகிறார்.

11ம் தேதி மாலையில் மயிலாடுதுறையில்
11-4-2014 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மயிலாடுதுறையில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் பேசுகிறார். பின்னர், இரவு 10.15 மணிக்கு திருவாரூரில் அவர் தங்குகிறார்.

12ம் தேதி மாலையில் தஞ்சாவூரில்
12-4-2014 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.

இரவு திருச்சியில்
இரவு 7 மணிக்கு திருச்சி உழவர் சந்தை திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். அன்று இரவு திருச்சியில் அவர் தங்குகிறார்.

13ம் தேதி விராலி மலையில் வேன் பிரசாரம்
13-4-2014 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு விராலிமலையில் வேன் மூலம் பிரசாரம் செய்யும் கருணாநிதி, மாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு மேலூரில் வேன் பிரசாரமும் செய்கிறார்.

இரவு மதுரையில்
பின்னர், இரவு 8 மணிக்கு மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார். அன்று இரவு மதுரையில் அவர் தங்குகிறார்.

14ம் தேதி சென்னை திரும்பல்
14-4-2014 (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் கருணாநிதி முற்பகல் 11.30 மணிக்கு சென்னை வந்து சேருகிறார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications