கருணாநிதிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு- ஒவ்வாமை என திமுக தகவல் #Karunanidhi
திமுக தலைவர் கருணாநிதி வழக்கமாக உட்கொள்ளும் மருந்தில் ஒன்று ஒத்துக்கொள்ளாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அலர்ஜி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வாமையால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சில நாட்களாக மருத்துவ ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர் வழக்கமாக உட்கொள்ளும் மருந்தில் ஒன்று ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி கடந்த சில தினங்களாக எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. திருமணம், பிறந்தநாள் என கட்சியினர் ஆசி வாங்க சென்றால் அவர் ஆசி வழங்கி போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். கடந்த சில நாட்களாகவே அதுபோன்ற நிகழ்வுகள் எதுவுமே நடைபெறவில்லை. அதே நேரத்தில் அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருவதாக இன்று அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications