சட்டசபை கூட்டத்தில் எப்படி செயலாற்றுவது.. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை
சென்னை: சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் பொருளாளரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நாளை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இன்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாநிதி பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 89 இடங்களில் வென்று வலுவான எதிர்கட்சியாக சட்டசபையில் அமர உள்ளழ. இந்த நிலையில் சட்டசபையில் எழுப்பவேண்டிய பிரச்னைகள், விவாதத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. நாளை தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
15வது சட்டசபையின் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தை கவர்னர் ரோசய்யா உரையாற்றி தொடங்கி வைக்கிறார். ஆளுநர் உரையில் பங்கேற்பதா? புறக்கணிப்பதா என்பது பற்றியும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாம். சட்டசபையில் எழுப்ப உள்ள பிரச்சினைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications