For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவை விமர்சித்த மோடிக்கு கருணாநிதி கண்டனம்! ரஜினி சந்திப்பு பற்றி 'நோ கமெண்ட்ஸ்'!!

By Mathi
|

சென்னை: திமுகவுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்று பேசிய பாரதிய ஜனதா ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, திமுக- அதிமுக இரண்டு கட்சிகளையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனத்துக்கு நேற்று இரவே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் பதிலடித்து கொடுத்துவிட்டார்.

Karunanidhi condemns Modi

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழக மக்களின் வருத்தத்தை சம்பாதிக்கும் வகையில் பேசியுள்ளார். தி.மு.க.விற்கு மக்கள் மீது அக்கறையில்லை என்று மோடி பேசியது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.

ரஜினி- மோடி சந்திப்பு

மேலும் ரஜினிகாந்த் மற்றும் நரேந்திர மோடி சந்திப்பு குறித்து கருத்து எதையும் தாம் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader M Karunanidhi condemns BJP Prime Ministerial Candidate Narendra Modi's remark on DMK was not worried about the welfare of the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X