கர்நாடகாவை கண்டித்து தீக்குளித்த விக்னேஷூக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தீக்குளித்த மன்னார்குடி விக்னேஷ் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நடத்தப்பட்ட பேரணி ஒன்றில் கலந்து கொண்ட மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து மாண்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
கர்நாடக அரசைக் கண்டித்து நடந்த பேரணியில் தீக்குளித்து மாண்டு போன விக்னேஷ்க்கு இரங்கல்
— KalaignarKarunanidhi (@kalaignar89) September 17, 2016
Read: https://t.co/s9UkUwHCZA
எவ்வளவு தீவிரமான பிரச்சினை ஆனாலும், அதற்காக உயிரோடு இருந்து வாழ்நாள் முழுதும் போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக் கொள்வதென்பது சோகமயமானதும், ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும்.
இன்றைய இளைஞர்கள் இதனை உணர்ந்து தங்களுடைய இத்தகைய போராட்ட வழிமுறைகளை வகுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தீக்குளித்து மாண்ட விக்னேஷ் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications