கருணாநிதி, ராமதாஸ், கொண்டாடிய பொங்கல் திருவிழா
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதோடு மட்டுமல்லாது உற்சாகமாக பொங்கல் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் தமிழகத் தலைவர்கள்.
திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கருணாநிதி குடும்ப பொங்கல்
திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.திமுக தலைவர் காலை நேரத்திலேயே பட்டு வேட்டி பட்டு சட்டை மஞ்சள் துண்டு அணிந்து உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா உடன் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

உதயநிதி, துரை தயாநிதி
பேரன்கள் உதயநிதி, துரை தயாநிதி ஆகியோர் தங்களின் மனைவி குழந்தைகளுடன் தாத்தாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

தயாநிதி மாறன் குடும்பத்தினர்
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் தனது மனைவி, குழந்தைகளுடன் திமுக தலைவரும் தாத்தாவுமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

ராயப்பேட்டையில் பொங்கல் விழா
சென்னை மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் 14, 15, 16ம் தேதி பொங்கல் விழா மற்றும் தமிழர் திருவிழா ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து 14ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். உடன் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

டாக்டர் ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரத்தில் கரும்பு வீட்டின் முன் விவசாய பொருட்களை படைத்து பொங்கல் கொண்டாடினார்.

சிங்கப்பூரில் பொங்கல்
தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாலைகள் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன.

திருநங்கைகள் பொங்கல் விழா
விழுப்புரத்தில் வசித்து வரும் திருநங்கைகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

விஜயகாந்த் பொங்கல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் தொண்டர்களுடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். மாட்டுப் பொங்கல் தினமான இன்று பசு மாட்டினையும், கன்றையும் வணங்கி அகத்திக் கீரை கொடுத்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications