கருணாநிதி 94வது பிறந்தநாள்: மனைவி தயாளு உடன் கேக் வெட்டி கொண்டாட்டம்
கருணாநிதி தனது 94வது பிறந்தநாளினை மகள் செல்வி ஊட்டி விட்ட கேக் சாப்பிட்டு உற்சாகத்துடன் கொண்டாடினார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைரவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவர் வசிக்கும் கோபாலபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. மகள் செல்வி தனது கையால் ஊட்டி விட்ட கேக் சாப்பிட்டு உற்சாகத்துடன் பிறந்தநாளைக் கொண்டாடினார்.
காலை முதலே திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி பெற்றனர். துரைமுருகன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

கருணாநிதி அவரது மனைவி தயாளு அம்மாள் அமர்ந்திருக்க அவரது மகள் செல்வி கேக் வெட்டி கொண்டாடினார். சிறிதளவு கேக்கை கருணாநிதிக்கும், தயாளு அம்மாளிற்கும் கேக் ஊட்டி விட்டார் செல்வி. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர். இன்னும் வேண்டுமா அப்பா என்று கேட்டு ஊட்டி விட்டார் செல்வி. அனைவரும் கரஒலி எழுப்பினர்.
இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். வைரவிழா நிகழ்ச்சி அழைப்பிதழையும், விழா மலரையும் கருணாநிதி பார்வையிட்டது, சோனியா காந்தியின் கடிதத்தை கேட்டு ரசித்தது வீடியோவாக வெளியான நிலையில் இப்போது பிறந்தநாள் கொண்டாட்டமும் வீடியோவாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications