கரூரில் பல்லாயிரம் கோடி பணம் பதுக்கல்.. சிபிஐ விசாரணை தேவை - கருணாநிதி வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: கரூரில் பல்லாயிரம் கோடி பணம் பதுக்கப்பட்டுள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திருவாரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூரில் இன்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டார். திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.

karunanidhi election campaign at thiruvarur

அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதில் சில அம்சங்கள்:

-கரூரில் பல்லாயிரம் கோடி பணம் பதுக்கல்

-பணம் பதுக்கல் குறித்து மத்திய அரசு சிபிஐ விசாரணை நடத்த முன்வர வேண்டும்

-பணம் பதுக்கல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஜெயலலிதா பரிந்துரைக்காது ஏன் ?

-பணத்தை மக்களிடம் வாரி இறைத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என அன்புநாதன் போன்றோர் திட்டமிட்டுள்ளனர்.

-பாவிகள் சோம்பேறிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்பதே திமுகவின் லட்சியம்

-திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது

-அதிமுகவின் வெற்றிக்கு சில அதிகாரிகள் உடன் போகிறார்கள்

-மக்களை விலைக்கு வாங்கும் அராஜகம் அதிமுக ஆட்சியில் நடக்கிறது

-சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்ள சிலர் தேர்தலை பயன்படுத்துகின்றனர்

-தேர்தலில் மக்களை விலைக்கு வாங்க சில முயற்சிகள் நடந்து வருகின்றன.

-அமைச்சர்களும், அதிகாரிகளும் திருந்த வேண்டும் மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும்

-லஞ்ச, ஊழல்களை மறைக்க சில கொலைகள் நடந்துள்ளன

-அதிகாரிகளுக்கு தெரிந்துதான் முறைகேடுகள் நடக்கின்றன

-தங்களுக்கு உடன்படாத இரண்டு, மூன்று பேரை கொலை செய்துள்ளனர்

-ஆட்சியாளர்கள் வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்

-திருவாரூர், திருத்துறைபூண்டியில் பணத்தால் வாக்குகளை வாங்க முயற்சி

-தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டிலும் அநீதிதான் கோலோச்சுவதாக உள்ளது

-சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்ள தேர்தலை பயன்படுத்துகின்றனர்

-கொலைக்கு அஞ்சா சில கொடும்பாவிகள் திரிவதாகவும் குற்றச்சாட்டு

-குற்றங்கள் இழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டங்கள் இல்லையா

-ரூ.100,200,300,400 என பணத்தை வாரி இறைத்து வாக்குகளை பெற ஆளும்கட்சியினர் திட்டம்

-வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம் காற்றிலே பறக்கிறது.

-மக்களை விலைக்கு வாங்கும் அராஜகம் அதிமுக ஆட்சியில் நடக்கிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+