ஆட்சி மாற்றம் காண வருகிறது 2016... புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கருணாநிதி நம்பிக்கை
சென்னை: 'ஆட்சி மாற்றம் காண வருகிறது 2016ஆம் ஆண்டு' என்று திமுக தலைவர் கருணாநிதி தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருணாநிதி வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தி:
தமிழக மக்களுக்குத் தொடர்ச்சியாக வேதனைகளைத் தந்த 2015ஆம் ஆண்டு மறைந்து புதுவாழ்வு தந்திடப் பொங்கி வருகிறது 2016 ஆங்கிலப் புத்தாண்டு!
தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் 2011 வரை முன்னணி மாநிலம்! அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது இந்தியாவிலேயே கடைசி மாநிலம்!

குறையாத விலைவாசி
அ.தி.மு.க. அரசின் பால்விலை உயர்வால்-மின்கட்டண உயர்வால்-பேருந்துக் கட்டண உயர்வால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா, ஐந்தாண்டுகள் ஆகியும் விலைவாசியைக் குறைக்கவில்லை, தி.மு.க. ஆட்சி உருவாக்கிய மின் திட்டங்கள் தந்த மின்சாரம் அல்லாமல், ஒரு மெகாவாட் மின்சாரத்தைக்கூட உற்பத்தி செய்திடவில்லை.

கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு
சென்னை உயர்நீதிமன்றப் பாதுகாப்பிற்குத் தமிழகக் காவல்படை வேண்டாம், மத்திய காவல்படையே தேவை என்ற உயர்நீதி மன்றத்தின் முடிவும், காவல் துறை மீது நம்பிக்கை இல்லை என்ற அறிவிப்பும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுக் கிடப்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அடுக்கடுக்காக அவலங்கள்
சென்னைத் துறைமுகம்-மதுரவாயல் மேம்பாலச் சாலைத்திட்டம் அ.தி.மு.க. அரசால் முடக்கப்பட்டு, துறைமுக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது ஜெயலலிதா ஆட்சி, உரிய நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்காமல் தாமதித்ததால், சென்னைவாழ் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. இப்படி அ.தி.மு.க. ஆட்சி அனைத்து முனைகளிலும் தந்த அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!

ஆட்சி மாற்றம் காண வரும் 2016
இந்நிலையில், தி.மு.க. அரசு அன்று உருவாக்கி 2015இல் பயன் தந்த மெட்ரோ இரயில் திட்டம், மின்சாரப் பிரச்சினையைத் தீர்த்த வடசென்னை, மேட்டூர், வல்லுhர் மின் திட்டங்கள் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் மீண்டும் உருவாக-தொழில் வளம் சிறக்க-அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணி நீர்வளம் பெருக்க-விவசாயம் செழிக்க- தமிழகம் வளமும் நலமும் பெற-அனைத்திற்கும் வாயிலாக ஆட்சி மாற்றம் காண வருகிறது ஆண்டு 2016 என்பதை நினைவுபடுத்தி, தமிழக மக்களுக்கு எனது உளமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications