முதல் முதலாக தேசியக் கொடியேற்றிய முதல்வர்... தற்போது தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளார்!
சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றும் அதிகாரத்தை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி. முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வரும் அவர்தான்.
Recommended Video

சென்னை: சுதந்திர தினத்தின்போது தேசியக் கொடியை முதல்வர்கள் ஏற்ற வேண்டும் என்று போராடி வென்று, முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் என்ற பெருமை பெற்றவர் கருணாநிதி. தற்போது தேசியக் கொடி போர்த்தப்பட்டு அவருடைய இறுதிச் சடங்கு நடக்கிறது.
தமிழக முதல்வராக ஐந்து முறை இருந்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில், ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வந்தனர்.

இதை மாற்றி குடியரசு தினத்தில் ஆளுநர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கருணாநிதி போராடினார்.
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அதன்படி, அனுமதி கிடைத்து, சுதந்திர தினத்தில் கொடியேற்றிய நாட்டிலேயே முதல் முதல்வர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றார். 1974 ஆகஸ்ட் 15ம் தேதி அவர் தேசியக் கொடியை ஏற்றினார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த அவருக்கு தற்போது முழு அரசு மரியாதையுடன் உடலடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அவருடைய உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது.
முதல்வர்களுக்கு உரிமை பெற்றுத் தந்த கருணாநிதிக்கு இந்த கவுரவம் மிகவும் பொருத்தமானதே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications