திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் கமல்ஹாசன் - கருணாநிதி வாழ்த்து!
சென்னை: செவாலியே விருது பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் கமல்ஹாசன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செவாலியே விருது பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரை உலகத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி கூறியுள்ளதாவது:

பிரான்ஸ் நாட்டின் சிறந்த விருதான "செவாலியே"விருது, கலைஞானி நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியினைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். "களத்தூர் கண்ணம்மா"திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இதுவரை 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்தவர் நடிகர் கமல்ஹாசன்.
ஐம்பதாண்டு காலமாக திரையுலகில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், சிறந்த நடிப்புக்காக மத்திய அரசின் "பத்மஸ்ரீ", "பத்மபூஷன்"ஆகிய விருதுகளையும், தமிழக அரசின் "கலைமாமணி"விருதையும், மேலும் பல தேசிய விருதுகளையும் ஏற்கனவே பெற்றிருக்கிறார். "செவாலியே"விருது பெற்றுள்ள கலைஞானி நடிகர் கமல்ஹாசனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications