வதந்திகளை நம்ப வேண்டாம்.. கருணாநிதி நலமுடன் இருக்கிறார்.. ஆ.ராசா விளக்கம்
திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.3 நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.

அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதால், பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது.
இந்த நிலையில் சில நிமிடம் முன், காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானது . அதில் கருணாநிதியின் உடல் உறுப்புகள் மீண்டும் சீராகி வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை மீண்டும் சீராகி வருகிறது என்று கூறப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.
அதில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை காரணமாக பின்னடைவு சீர் செய்யப்பட்டது.
அவர் நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பேட்டியளித்தார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications