கருணாநிதி நலமுடன் உள்ளார்.. ஐசியூவில் நேரடியாக பார்த்தோம்.. முதல்வர் எடப்பாடியார்!
திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்��ாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று நேரில் சென்றனர்.

அவர்களுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன, சிவி சண்முகம், காமராஜ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் சென்றனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் மருத்துவர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் முதல்வரிடம் விளக்கினர்.
இதைத்தொடர்ந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவேரி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது; அவர் நலமாக இருக்கிறார்
நானும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஐசியூவில் சிகிச்சை பெறும் அவரை நேரில் பார்த்தோம். மருத்துவர்கள் தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.












Click it and Unblock the Notifications