For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்ஜிஆரை ‘அம்பலப்படுத்த’ கருணாநிதியுடன் கை கோர்த்த ஜெயலலிதா-வலம்புரிஜான் ’பகீர்’ தகவல்கள் flashback

எம்ஜிஆரை அசிங்கப்படுத்த கருணாநிதியுடன் ஜெயலலிதா கை கோர்த்திருந்ததாக மறைந்த வலம்புரிஜான் தம்முடைய வணக்கம் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    எம்ஜிஆரை ‘அம்பலப்படுத்த’ கருணாநிதியுடன் கை கோர்த்த ஜெயலலிதா- வீடியோ

    சென்னை: எம்ஜிஆரை அவமானப்படுத்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் திட்டமிட்டிருந்ததாகவும் இதை முறியடிக்கவே ஜெயலலிதாவை மீண்டும் தம்முடன் இணைத்துக் கொண்டதாகவும் மறைந்த முதுபெரும் எழுத்தாளரும் எம்ஜிஆரின் மிகுந்த நம்பிக்கைகுரியவருமாக இருந்த வலம்புரிஜான் பதிவு செய்துள்ளார்.

    எம்ஜிஆரின் தாய் வார இதழின் ஆசிரியராக இருந்தவர் வலம்புரி ஜான். அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தார். எம்ஜிஆரின் உத்தரவுக்கேற்ப ஜெயலலிதாவின் அரசியல் பேச்சுகளை எழுதிக் கொடுத்தவர் வலம்புரிஜான்.

    கடைசி நாட்களில் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக எதிர்த்தார். நக்கீரன் வார இதழில் வணக்கம் என்ற தலைப்பில் தமிழகத்தையே அதிரவைத்த அந்தப்புர அரசியலை அம்பலப்படுத்தி ஜெயலலிதா- சசிகலாவின் பெருங்கோபத்துக்குள்ளானார். அந்த வணக்கம் தொடரை நக்கீரன் ஏடு புத்தகமாகவும் வெளியிட்டது.

    வலம்புரிஜான் பதிவு

    வலம்புரிஜான் பதிவு

    அதில்தான் இப்போது சர்ச்சையாகி வரும் சோபன்பாபு- ஜெயலலிதா விவகாரத்தையும் வலம்புரிஜான் பதிவு செய்திருந்தார். சோபன்பாபு விவகாரத்தை ஜெயலலிதா எழுதிய அதே காலகட்டத்தில் சட்டென ஜெயலலிதாவை தம்முடன் எம்ஜிஆர் மீண்டும் இணைத்துக் கொண்டார். இதன் பகீர் பின்னணி குறித்து வலம்புரி ஜான், நக்கீரனின் வணக்கம் தொடரில் பதிவு செய்துள்ளதாவது:

    வெறித்தனமான அங்கீகாரம்

    வெறித்தனமான அங்கீகாரம்

    எம்ஜிஆர் மீண்டும் ஜெயலலிதா பைத்தியம் ஆனதற்கு ஆர்.எம். வீரப்பன் ஏற்பாடு செய்த ஒரு நாட்டிய நாடகம் மாத்திரமே காரணம் இல்லை. இந்த வெறித்தனமான அங்கீகாரத்துக்கு வேறு ஒரு பின்னணி இருக்கிறது.

    அசிங்கப்படுத்த திட்டம்

    அசிங்கப்படுத்த திட்டம்

    எம்.ஜி.ஆர். இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு ஒரு நம்பகமான ஒரு செய்தி கிடைத்தது. அதாவது தனது பிறவி எதிரியான கருணாநிதி, ஜெயலலிதாவைப் பயன்படுத்தி தன்னை மேடைகளிலும் பத்திரிகைகளிலும் அசிங்கப்படுத்தப் போகிறார் என்பதுதான் அது.

    உறுதி செய்த அதிபர்கள்

    உறுதி செய்த அதிபர்கள்

    இதை நம்புவதா, இல்லையா என்று பலநாள் பாடுபட்ட எம்.ஜி.ஆர். இறுதியாக அவரது நெருக்கமான நண்பர்கள் வாயிலாக இந்த தகவலை உறுதிப்படுத்திக் கொண்டார். இந்த இரண்டு நண்பர்களுமே சென்னையில் உள்ள பிரபலமான திரையங்கங்களின் அதிபர்கள்.

    வழியே இல்லாத எம்ஜிஆர்

    வழியே இல்லாத எம்ஜிஆர்

    தன்னோடு நெருங்கியிருந்த செல்வாக்குமிக்க ஒரு நடிகையைக் கருணாநிதி தனக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டால் தனது புகழுக்கு களங்கம் கண்டிப்பாக ஏற்படும் என எம்ஜிஆர் நினைத்தார். அதன்விளைவுதான் ஆபத்திற்குப் பாவம் இல்லை என்று இந்த மின்சாரக் கம்பியைப் பிடித்து தொங்கினார். அவர் தூக்கியெறியப்பட்டார். அவரோடு தமிழ்நாடும் ஒரு பாதாளத்தில் தூக்கி எறியப்பட்டது.

    இவ்வாறு வலம்புரிஜான் பதிவிட்டுள்ளார்.

    (அடுத்து.... எம்ஜிஆருக்கு தெரியாமல் ஜெ. வுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் எழுதிய பக்க கடிதம்)

    English summary
    Late Writer and Rajya Sabha MP Valampuri John who helped Jayalalithaa in her early political years. According to Valampuri John's Vanakkam Book, he registered once Karunanidhi and Jayalalithaa joined with hands againt MGR in early 1980.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X