ராஜாஜி மண்டபத்தில் போலீஸ் தடியடி.. கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி?
திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக போலீஸ் திணறி வருகிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக போலீஸ் திணறி வருகிறது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தற்போது நடந்து வருகிறது.

காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முக்கியமான அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அங்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடி வருகிறார்கள். ஆனால் போலீஸ் எண்ணிக்கை மிகவும் குறைவான அளவிலேயே இருக்கிறது. அரசு இந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
போலீஸ் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் சில தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. கூட்டத்தை கலைப்பதற்காக போலீஸ் தடியடி நடத்தியது.
#WATCH: Visuals of huge crowd at Chennai's #RajajiHall where mortal remains of M #Karunanidhi are kept. #TamilNadu pic.twitter.com/dQYd0D8qQ1
— ANI (@ANI) August 8, 2018
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கூட்ட நெரிசலில் 26 பேர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத போலீஸ் மீதும், தமிழக அரசு மீதும் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications