அன்புநாதனும் அந்த 2 முக்கிய அதிமுக அமைச்சர்களும்....
அன்புநாதன் மூலமாக இரண்டு முக்கிய அமைச்சர்கள் தங்களது லஞ்ச, ஊழல் பணங்களை பல இடங்களுக்கு அனுப்பினார்கள் என்றும், ஊரின் பெயரை தன் பெயருக்கு முன்னாள் வைத்துள்ள அமைச்சர் ஹாங்காங் அருகே தீவே வைத்திருப்பதாகவும், அமைச்சரின் "பாஸ்போர்ட்டை" சோதனையிட்டாலே அவர் பயணம் செய்த விவரத்தை அறியலாம் என்றும், நடிகைகள் பற்றியும் பக்கம் பக்கமாக வந்த செய்திகள் இன்று வரை அமைச்சர்களாலோ, முதல்வராலோ மறுக்கப்படவில்லையே; ஏன்?

வருமான வரித் துறை அதிகாரிகள், அன்புநாதன் வீட்டில் சோதனை முடித்ததும், மாலையில் வேலாயுதம்பாளையம் அருகே அன்புநாதனின் நண்பர் மணிமாறன் என்பவரின் தொழிற்சாலையிலும் சோதனை செய்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகக் காவல் துறையினரின் பார்வையிலிருந்தும், வருமான வரித் துறையினரின் பிடியிலிருந்தும் அன்புநாதன் மாயமாகியிருக்கிறார் என்றால் அதற்கு மூல காரணம் யார்? அவரைத் தப்ப விட்ட புனிதர்கள் யார்? தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் துணையின்றி, அமைச்சர்களின் உதவியின்றி அவரால் எப்படி தப்ப முடியும்? சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் எல்லாம் வைத்த கோரிக்கை என்னவாயிற்று? இதை யெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டதா? இதற்கெல்லாம் பதில் என்ன?
அன்புநாதன் வீட்டில் சோதனை நடத்திய எஸ்.பி., வந்திதா பாண்டேவை உயர் போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாகச் செய்தி வந்ததே? அவரைக் கொலை செய்யவே முயற்சி நடைபெற்றதாக ஏடுகள் கூறினவே? என்ன ஆயிற்று? எப்படி மறைத்தார்கள்? எங்கே தேர்தல் ஆணையம்?
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மணி மாறன் வீடு, பேக்டரி, குடோன் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தப்பட்டதே, தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்படுகிறதே; தேர்தல் ஆணையம் என்ன செய்தது?
கரூரில் நத்தம் விசுவநாதன் நண்பர் வீட்டில் இந்தச் சோதனை என்றால், அதற்கு மறுநாளே சென்னையில் அமைச்சர் வைத்திலிங்கத்தின் நண்பர் வீட்டில் சோதனை நடைபெற்றதாகவும், ஐந்து கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்தி வரவில்லையா? தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் என்றும், தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்றும் அந்தச் செய்தியில் கூறப் பட்டிருந்ததே, இது உண்மையா இல்லையா? இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததா?
தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றனவே, எந்தத் தேர்தலிலாவது இந்த முறை போல பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? ஐந்து மாநிலங்களில் மொத்தம் 133 கோடி ரூபாய் பறிமுதல் என்றால், அதிலே தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அது அ.தி.மு.க. அரசுக்கு மற்றொரு இழிவு அல்லவா? தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறதா இல்லையா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications