ஜெயலலிதா- அயோத்தி கரசேவை தொடர்பு எங்களுக்கு தெரியாதா என்ன? - கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் போன்ற அறிக்கையில்,
''முதல்-அமைச்சர் ஜெயலலிதா தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டிற்கு கருணாநிதி மட்டுமே சொந்தம் கொண்டாடுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்றும் தனது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டிற்கு வித்திட்டதே தான்தான் என்றும் பேசியிருக்கிறார்.
அவருக்கு நான் பதில் கூறுவதைவிட முஸ்லிம்களுக்காக அன்றாடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், அண்ணாவின் நெருங்கிய நண்பரான பேராசிரியர் காதர் மொய்தீனும்,
மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், கடந்தமுறை ஜெயலலிதாவுடன் தோழமைக் கொண்டு அந்த கட்சி வெற்றி பெற மாநிலம் முழுவதும் சுற்றி பாடுபட்ட வருமான ஜவாருல்லாவும் என்ன சொன்னார்கள் என்பதைக் குறிப்பிட்டாலே முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீடு வழங்கியது, தி.மு.க. ஆட்சியா, ஜெயலலிதாவா என்பது தெளிவாகி விடும்.
ஜெயலலிதா, தூத்துக்குடியில் பேசும்போது அ.தி.மு.க. ஒருபோதும் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியதே இல்லை என்று கூறி தப்பிக்கப் பார்த்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கும், கரசேவைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அவர் அப்போது எவ்வாறு நடந்து கொண்டார் என்பது பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன?.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு கிளைத் தலைவர், மறைந்த ஏ.கே.ஏ.அப்துல் சமத் அயோத்தியில் நடைபெற்ற கரசேவையில் அ.தி.மு.க. தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்று அப்போதே குற்றஞ் சாட்டியபோது, ஜெயலலிதா அதை மறுத்தாரா?.
தமிழக மக்களிடம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்தான் ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று லட்சக்கணக்கான கையெழுத்துக்களை வாங்கி பா.ஜ.க.வினர் தமிழக ஆளுநரிடம் அப்போது கொடுத்தபோது அந்த மனுவிலே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாக அப்போது பா.ஜ.க. சார்பிலே அறிவித்தபோது ஜெயலலிதா அப்போது அதை மறுக்கவில்லையே?
இப்படியெல்லாம் பேசி, இஸ்லாமியர்களை ஏமாற்றிவிட முடியுமா என்ன?'' என்று தெரிவித்துள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications