சசி குழுவின் ஜாஸ் சினிமா கட்டுப்பாட்டில் 136 தியேட்டர்கள் இருக்காமே? கேட்கிறார் கருணாநிதி
சென்னை: சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்' என்பார்கள்; இவர்களின் புளுகு மூட்டையை எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும் என்பது போகப் போகத் தான் தெரியும்! என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் ஜாஸ் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலே இருப்பவர் சாட்சாத் இளவரசியின் மகன் விவேக். அவர் நிர்வாகத்திலே உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால் அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது?
முதன் முதலில் இந்தச் செய்தியை வெளியிட்ட ஒரு நாளிதழ், "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியிலே உள்ள திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகத் தானே செய்தி வெளியிட்டது. அந்த சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கும், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கும் என்ன தொடர்பு? சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து, திரையரங்கம் நடத்தும் உரிமையை ஜாஸ் நிறுவனம் பெற்றதா? அல்லது பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி நிறுவனத்திடமிருந்து அவர்கள் அறிக்கையிலே சுட்டிக்காட்டியிருப்பது போல நேரடியாகப் பெற்றதா? என்று கேட்டுள்ளார்.

தியேட்டர்களின் உரிமையாளர்கள் யார்?
லூக்ஸ் எனப்படும் 11 திரையரங்குகளுக்கு 2014 மார்ச் மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுவது உண்மை என்றால்; 2014 மார்ச் மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை அந்த 11 திரையரங்குகளை நடத்திக் கொண்டிருந்தது யார்? சத்யம் சினிமாஸ் நிறுவனம் தானே? அதை ஏன் மறைக்கிறீர்கள்?

11 தியேட்டர்கள்
2013 செப்டம்பர் மாதத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததே; அந்த வழக்கின் அடிப்படையில் தான் தற்போது, சத்யம் சினிமாஸ் நிறுவனம் மிரட்டப்பட்டு, இந்த 11 திரையரங்குகள் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா?

136 தியேட்டர்கள்
சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? அதற்கான பணம் எங்கிருந்து, யாரால், கிடைத்தது?

அனுமதி வாங்கி விட்டார்களா?
பி.வி.ஆர். சினிமா நிறுவனம், சத்யம் சினிமா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க முயற்சித்தாக ஒரு ஆங்கில நாளிதழ் முதன் முதலாகச் செய்தி வெளியிட்டிருந்ததே, அந்த பி.வி.ஆர். நிறுவனத்திற்குச் சொந்தமான திரையரங்குகளுக்கு அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் போடப்பட்டது எப்போது? அதற்கு அனுமதி வழங்கப்பட்டாகி விட்டதா? எப்போது? வழங்கப்படவில்லை என்றால், அவர்கள் அவற்றை விற்பதற்கு முன் வராதது தானா?

வங்கிக் கடன்
ஜாஸ் சினிமா நிறுவனம், கோவை - பீளமேடு பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து, 2015 ஜனவரியில், 42 கோடியே 50 இலட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில், "லூக்ஸ்" திரையரங்குகளில் உள்ள புரஜக்டர், ஃபர்னிச்சர், ஏர் கண்டிஷனர்கள் ஆகியவற்றை கடனுக்கு அடமானமாகக் காட்டியிருக்கிறார்கள்.

கெட்டிக்காரன் புளுகு
தியேட்டர்களை விலைக்கு வாங்காமல், ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு மட்டுமே எடுத்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனம், திரையரங்குகளில் உள்ள தளவாடங்களைக் காட்டி, நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற முடியுமா? 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்' என்பார்கள்; இவர்களின் புளுகு மூட்டையை எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும் என்பது போகப் போகத் தான் தெரியும்!
|
கேள்விக்கு என்ன பதில்
இங்கே குறிப்பிட்டுள்ள கேள்விகள் அனைத்திற்கும் முறையான முழுமையான பதில் விளக்கங்கள் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கும் வரை, பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள ஆழமான அய்யப்பாடுகள் அகலாது! மேலும் மத்திய அரசு தன்னுடைய உளவுத் துறை மூலம் இந்தத் தியேட்டர்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து வைத்திருப்பதாகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
|
நீதியை நிலை நாட்டுமா?
அது உண்மையானால், மத்திய அரசு அந்த ஆவணங்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கு உரிய நேரம் வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக வெளியிட்டு விபரங்களைத் தெரிவிப்பதோடு; மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் மூலம் விசாரணை செய்து வழக்கு தொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான், நீதியை எப்போதும் நிலைநாட்டுவோம் என்று பா.ஜ.க. அரசு உரிமை கொண்டாடுவதற்கு ஓரளவேனும் பொருள் இருக்க முடியும். இல்லாவிட்டால் நடப்பதெல்லாம் வெளிப் பகட்டு; சொல்லப் போனால் வெட்கக் கேடு! என்று தான் நாட்டு மக்கள் நினைப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications