மு.க.ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் வைரவிழா!
கருணாநிதி ஆக்டிவ் அரசியலில் இருந்தபோது, டெல்லி அரசியலில் ஸ்டாலின் பழக்கப்படவில்லை. டெல்லியில் திமுக பலம் பெற, ஸ்டாலினுக்கு இந்த வைர விழா உதவும்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டசபை வைர விழாவில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் அரசியல் வாழ்க்கைக்கு இது ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை, இன்று, மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றியுரையாற்றுகிறார்.

எதிர்க்கட்சிகள்
இந்த விழாவில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

ஸ்டாலின் மையப்புள்ளி
பாஜக மற்றும் அதன் 'தோழமை' கட்சியான அதிமுகவுக்கு இந்த விழாவில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்படவில்லை. இந்த விழாவில் உடல் நலக்காரணங்களால் கருணாநிதியால் பங்கேற்க முடியாத சூழல். எனவே விழாவிற்கு வருவோர் அத்தனை பேரின் மைய கவனிப்பு நபராக இருக்கப்போகிறவர், திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் உள்ள, கட்சியின் செயல் தலைவர், மு.க.ஸ்டாலின்தான்.

போர்த் தளபதி
இந்த மேடையில், கண்டிப்பாக மோடி அரசுக்கு எதிராக அணி திரட்டல் போருக்கான, சங்க நாதம் முழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சங்க நாதம் முழங்கப்படும்போது, திமுகவுக்கு மட்டுமல்லாது, இப்போரின் தேசிய அளவிலான படைத் 'தளபதியாக' ஸ்டாலின் மாறுவார். ஏனெனில், கடந்த சட்டசபை தேர்தலில் திமுக பெற்ற வாக்கு சதவீதம் ஆளும் கட்சிக்கு ஏறக்குறைய சரிசமமானது. எனவே லோக்சபா தேர்தலின்போது, தமிழகத்தில்தான் மாற்று அணி கூட்டணி அதிக கவனம் செலுத்தும். திமுகவின் தளபதியாக கொண்டாடப்படும் ஸ்டாலின்தான் அப்போது தேசிய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்களின் தளபதியாகவும் பார்க்கப்படுவார்.

ஸ்டாலினுக்கு முக்கியத்துவம்
தமிழகத்தில் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் பெறும் இடங்கள், தேசிய அரசியலில் முக்கிய பங்கை வகிக்கும். எனவே ஸ்டாலினை தங்களின் உற்ற நண்பராக மாற்றிக்கொள்ள வேண்டியது, பிராந்திய கட்சிகள், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முதல் அஜென்டாவாக இருக்கும். ஸ்டாலின் தேசிய அளவில் கவனம் ஈர்க்கப்படுவார்.

டெல்லி அரசியல்
கருணாநிதி ஆக்டிவ் அரசியலில் இருந்தபோது, டெல்லி அரசியலில் ஸ்டாலின் பழக்கப்படவில்லை. டெல்லி லாபிகளை சமாளிக்க டெல்லியில் தனது பிடியை எப்போதுமே இறுக்கி வைத்திருந்தவர் கருணாநிதி. இப்போது அதில் வெற்றிடம் உருவாகியுள்ளது. மத்திய அரசு நினைத்தால் திமுகவை மிரட்டி பணிய வைக்க முடியும் என்ற ஒரு பிம்பம் காட்டப்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ள டெல்லியில் திமுக பலம் பெற, ஸ்டாலினுக்கு இந்த வைர விழா உதவும். ஸ்ஸடாலினுக்கு பிற கட்சிகளின் உதவியும், பிற கட்சிகளுக்கு ஸ்டாலினின் உதவியும் தேவைப்படும் இந்த சூழலை பயன்படுத்திக்கொள்வதில்தான் ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் அடங்கியுள்ளது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications