கருணாநிதி நலமுடன் இருக்கிறார்.. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. சொல்கிறார் கனிமொழி
கருணாநிதி நலமுடன் இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கருணாநிதி நலமுடன் இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்றிரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது..

அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியை சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து திமுக எம்பியும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி இன்று மீண்டும் காவிரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக கூறினார்.
கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். கனிமொழியின் தகவலால் மருத்துவமனை முன்பு திரண்டுள்ள திமுக தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications