கருணாநிதி தேறி வருகிறார்.. ஸ்டாலினிடம் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், வைரமுத்து
ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தேறி வருகிறது. நேற்று கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை பிரச்சினை காரணமக உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர் சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது வீட்டுக்கே வந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திமுக தலைவர் கருணாநிதிக்கு வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒரு மருந்து ஒத்துக்கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். டாக்டர்கள் கருணாநிதியை சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் கருணாநிதியை காண வருவதை தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தற்போது கருணாநிதியின் உடல் நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றும் கூட டாக்டர்கள் வருகை தந்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து சிகிச்சை அளித்துச் சென்றனர்.
இதற்கிடையே, கோபாலபுரம் இல்லத்திற்கு நேற்று திருநாவுக்கரசர், இளங்கோவன், வைரமுத்து உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள் கருணாநிதியின் மகனும், திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் நலம் குறித்து விசாரித்தனர்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது!












Click it and Unblock the Notifications