கருணாநிதிக்கு காய்ச்சல், நோய் தொற்று குறைகிறது.. ஸ்டாலின் தகவலால் நிம்மதியில் தொண்டர்கள்!

கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் மற்றும் நோய் தொற்று நல்லமுறையில் குறைந்து வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் மற்றும் நோய் தொற்று நல்லமுறையில் குறைந்து வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் நலிவடைந்துள்ளது.

Karunanidhis health condition is improved: Stalin

அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் இம்முறை அவருக்கு வீட்டிலேயே சிகிச்சையளித்து வருகின்றனர். சிறுநீர் பாதையில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார் கருணாநிதி.

அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர்கள் தேசிய அரசியல் தலைவர்கள் பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து வருகின்றனர்.

கோபாலபுரம் பகுதியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் மகனும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதிக்கு ஏற்பட்ட நோய் தொற்றும், காய்ச்சலும் நல்லபடியாக குறைந்து வருகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+