திமுகவின் செம்பரம்பாக்கம் ஆர்ப்பாட்டம்... சைதாப்பேட்டையிலிருந்து சேப்பாக்கத்திற்கு இடமாற்றம்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தாமதம் தொடர்பாக திமுக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டப் போராட்டம் சைதாப்பேட்டைக்குப் பதில் சேப்பாக்கத்தில் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை அதிக அளவில் திறந்ததே காரணம் என பல்வேறு கட்சிகளம் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி் ஜனவரி 5ம் தேதி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தை சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு அருகில் நடத்த முடிவு செய்து காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். இது தொடர்பாக திமுக சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுகவினர் போராட்டம் நடத்த குறிப்பிட்டிருந்த இடம் போராட்டத்துக்கு அனுமதிக்கப்படாத இடம் என்பதால் அங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்போது சேப்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது. வருகிற 5ம் தேதி அன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடக்கும் போராட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
சேப்பாக்கம் கருணாநிதியின் முன்னாள் சட்டசபைத் தொகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications