கருணாநிதியின் மூத்த சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள் காலமானார்.. ராமதாஸ் இரங்கல்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். அன்னாருக்கு வயது 98.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களின் பாட்டிதான் சண்முகசுந்தரத்தம்மாள். 98 வயதான சுந்தரத்தம்மாள் சமீபகாலமாக முதுமை காரணமாக உடல் நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தார்.

நேரில் அஞ்சலி:
இந்நிலையில் இன்று அவர் காலமானார். தனது மூத்த சகோதரியின் மரணச் செய்தியால் திமுக தலைவர் கருணாநிதி வேதனை அடைந்துள்ளார். மேலும், அவரது வீட்டுக்கு விரைந்து சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் ஸ்டாலினும் சுந்தரத்தம்மாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ராமதாஸ் இரங்கல்:
சண்முகசுந்தரத்தம்மாள் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :-
தி.மு.க. தலைவர் கலைஞரின் மூத்த சகோதரியும், மறைந்த முரசொலி மாறனின் தாயாருமான சண்முகசுந்தரத்தம்மாள் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும், துயரமும் அடைந்தேன்.
கலைஞர் மீது சண்முகசுந்தரத்தம்மாள் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தவர். கலைஞரின் தாயாருக்கு இணையாக பாசம் காட்டி வளர்த்தவர். அதேபோல், கலைஞரும் சண்முகசுந்தரத் தம்மாள் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்ததுடன், அவரது சொல்லை மீறாத அளவுக்கு மரியாதை கொண்டிருந்தார். சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள் மீது கொண்டிருந்த பாசம் காரணமாக, அவரது புதல்வர் முரசொலி மாறனை கலைஞர்தான் அன்புகாட்டி வளர்த்தார்.
நெருக்கடியான காலகட்டங்களில் குடும்ப வழிகாட்டியாக திகழ்ந்த மூத்த சகோதரியின் மறைவு, கலைஞருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கலைஞரின் சோகத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்.
சண்முகசுந்தரத்தம்மாளை இழந்து வாடும் தி.மு.க. தலைவர் கலைஞருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications