எஃப்.எம். ஏலத்தில் சன் குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு- கருணாநிதி கடும் கண்டனம்
சென்னை: எப்.எம். ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா முழுதும் பல்வேறு நகரங்களில் எப்.எம். ரேடியோவின் 135 சேனல்களுக்கு உரிமம் வழங்க மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதையொட்டி, ஒலிபரப்பு சேவைக்கென தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்ட டெண்டரில் சன் குழுமத்தின் ஐந்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சகம் தர வேண்டிய "பாதுகாப்புச் சான்றிதழ்" சன் குழுமத்தின் எப்.எம். சேனல்களுக்கு மறுக்கப்பட்டதாலேயே டெண்டரில் அவர்கள் கலந்து கொள்ளக் கூடாதென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், துல்லியமாக ஆய்வு செய்து; சன் குழுமத்திற்கு அனுமதி மறுத்தால், அது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 14 மற்றும் 19 ஆகியவற்றை மீறுவதாக இருக்கும் என்று உறுதியான பரிந்துரையினை மத்திய அரசுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில்; தற்போது சன் குழுமத்திற்கு அனுமதி மறுத்திருப்பது மத்திய அரசில் தொடர்ந்து பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை என்று முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், திரு. மோகன் பராசரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியத் தனியார் வானொலிகள் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், உதய் சாவ்லா பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஒரிசா மாநிலத்தைப் புயல் தாக்கியபோது, மக்களுக்குச் சிறப்பாகத் தகவல்களைக் கொண்டு சேர்த்ததும், நேபாளம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவியாக விளங்கியதும் சன் குழுமத்தின் சேனல்கள் தான். எனவே காரணங்கள் ஏதுமில்லாமல் சன் குழுமத்தின் மீது எடுத்துள்ள நடவடிக்கை நீதிக்கு எதிரானது" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்தியன் பிராட்காஸ்டிங் பவுண்டேஷன் தலைவர், செய்தி ஒலிபரப்பாளர்கள் சங்கத் தலைவர், ஆங்கில ஏடுகளான டெகான் ஹெரால்டு, தி எகானமிக் டைம்ஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வைகோ போன்றவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தங்களின் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார்கள்.
நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நாட்டுக்கு எந்தவகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்க முடியாத நிலையில் சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்.
எனவே மத்திய அரசு அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை பாதுகாத்திடும் வண்ணம் தன்னுடைய முடிவினை உடனடியாக மறு பரிசீலனை செய்திட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications