ரேசன் கடை, அரசு அங்காடிகளில் மட்டும் பருப்பு விலையை குறைத்தால் போதுமா? கருணாநிதி கேள்வி
சென்னை: ரேசன் கடைகளிலும், அரசு அங்காடிகளிலும் துவரம் பருப்பை கொடுத்தால் போதுமா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் 91 அரசு அங்காடிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கடைகளுக்குப் படையெடுத்தால் போதுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு, தற்போது துவரம் பருப்பின் விலை நான்கு மடங்காக அதிகரித்து 210 ரூபாயாக உள்ளதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் கருணாநிதி இன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் வேலை என்றுகூட இவர்கள் நினைப்பதில்லை எதனால் விலைவாசி கூடுகிறது என்பதையும் கவனிப்பது இல்லை. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை தமிழ் மக்கள் நன்றாகவே அறிவார்கள். ஏன், இந்த இதழ், ஜூனியர் விகடனில் கூட இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் வேலை என்றுகூட இவர்கள் நினைப்பதில்லை எதனால் விலைவாசி கூடுகிறது என்பதையும் கவனிப்பது இல்லை. துவரம் பருப்பு விலை உயர்ந்து விட்டதா, ஏதாவது ஒரு நாட்டில் இருந்து அந்த நேரத்துக்கு இறக்குமதி செய்தால் தனது கடமை முடிந்து விட்டதாக மத்திய அரசு நினைக்கிறது.
அரசு அங்காடிகளில் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொடுத்தால் போதும் என்று மாநில அரசு நினைக்கிறது. தமிழகம் முழுவதும் 91 அரசு அங்காடிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன்
கடைகளும் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கடைகளுக்குப் படையெடுத்தால் என்ன ஆகும்? தங்கள் கடமைக்கு சில நூறு டன்களைக் கொண்டு வந்து, அதை மட்டும் கிலோ 110
ரூபாய்க்குக் கொடுப்பார்கள்.
இதோ பார், துவரம் பருப்பு விலை குறைந்து விட்டது"என்று விளம்பரம் கொடுத்துக் கொள்ள மட்டுமே அது பயன்படும். பண்டிகைக் காலங்களில் விலைவாசி உயரும்
என்றால் பல மாதங்களுக்கு முன்பே அதனை வாங்கி விநியோகிக்கும் முன் யோசனை ஏன் வருவதில்லை? ஆட்சியாளர்கள் இதெல்லாம் தங்கள் வேலையாக நினைப்பதில்லை"என்று அ.தி.மு.க.
அரசுக்கும் அந்தத் துறையின் அமைச்சருக்கும் ஜூனியர் விகடன் விளக்கம் கொடுத்துள்ளது. துறையின் அமைச்சர் முதலில் அந்த இதழ் கேட்டுள்ள விவரத்திற்கு பதில் கூற முன் வரட்டும் என்று கருணாநிதி வறியுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications