தியாகு உண்ணாவிரதத்தை கைவிட கருணாநிதி வலியுறுத்தல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
'இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இலங்கையில் நடைபெறவுள்ள இந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று நான் பல முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். டெசோ சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை இந்திய அரசுக்கு வைத்துள்ளன. ஆனாலும், இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வந்தபாடில்லை. உரிய நேரத்தில் இந்தியா தக்க முடிவெடுக்குமென்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான், தியாகு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
தி.மு.க. சார்பில் நேற்றைய தினம் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோரை தியாகு உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கே நான் அனுப்பி வைத்தேன். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்றைய தினம் அங்கே சென்று தியாகுவுடன் இணைந்து உண்ணா விரதம் இருந்திருக்கிறார்.
தியாகு கோரிக்கை நியாயமானது என்ற போதிலும், ஏற்கனவே அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு; தி.மு.க. ஆட்சியில், என்னுடைய முயற்சியால் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர், இப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிக்கையை விடுக்கின்றேன்.
அவர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அடிப்படையாக ஒன்பது கோரிக்கைகளை வைத்திருக்கிறார் என்ற போதிலும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன் வெல்த்அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். நவம்பரில் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது போன்றவற்றை தோழர் தியாகு முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்ற போதிலும், காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அந்த வழியிலே தொடர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications