மேக்சேசே விருது பெற்ற டி.எம். கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சனுக்கு வாழ்த்துகள்
பிலிப்பைன்ஸ் நாட்டு அரசினால் வழங்கப்படும் "மேக்சேசே" விருது, ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் உயர்ந்த விருதாகும். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ் பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவரான, ரமோன் மேக்சேசே நினைவாக இந்த விருது, ஆசிய நாடுகளில் சிறந்த சேவை செய்வோருக்கு 1957ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பணி, பொதுச் சேவை, கலை,, சமூகம் என பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நேற்றையதினம் 2016ஆம் ஆண்டுக்கான "மேக்சேசே" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளுக்கு மூன்று தனி நபர்கள், மற்றும் மூன்று அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து, இந்த ஆண்டு, இந்த விருதுக்கு நமது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப்பாடகரான, டி.எம். கிருஷ்ணா அவர்களும், மற்றும் கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயலைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரமான கலைஞராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்படும் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கும், தலித் குடும்பத்தில் பிறந்து, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் சுமக்கும் கொடுமையால் குமுறி அந்த அவலத்தை ஒழிப்பதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெஸ்வாடா வில்சன் அவர்களுக்கும் இந்த ஆண்டுக்கான "மேக்சேசே" விருது கிடைத்துள்ளமைக்காக எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications