நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான போராட்டங்கள்- ஆய்வறிக்கை தகவல்
தமிழகத்திலே தான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மக்கள் போராட வேண்டிய நிலைமை இந்த ஆட்சியிலே உள்ளது. போராட்டங்களா? அ.தி.மு.க. ஆட்சியிலா? இல்லவே இல்லை என்று முதலமைச்சர் இப்போது மறுக்கக் கூடும். ஆனால் 22-9-2015 அன்று காவல் துறை மானிய விவாதத்திற்கு பதில் கூறிய முதலமைச்சர் ஜெயலலிதாவே, தன்னுடைய உரையில், "உண்மை நிலைமை என்ன? காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கூடத்தினர் மேற்கொண்ட ஆய்வின்படி தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிய வருகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலே 25 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். அதாவது, ஒட்டு மொத்தமாக இந்தியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட் டங்களில் 25 சதவிகிதம், தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்றுள்ளன" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இந்த ஆட்சியில் காவல் துறையில் உள்ள காலிப் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. காவல் துறையினரின் மொத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 14 பேர் என்றால், அதிலே 19 ஆயிரத்து 157 இடங்கள் காலியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டுமென்று சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியே உத்தரவிட்ட போதிலும் அந்த இடங்கள் நிரப்பப்பட வில்லை. காவல் துறை அதிகாரிகள் வீடுகளிலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளிலே கூட "ஆர்டர்லி" என்ற பெயரால் காவல் துறையினர் பணியாற்றும் போக்கு இன்னமும் தொடருகிறது.
இப்படி இரண்டு பேர் செய்ய வேண்டிய பணியை ஒருவரே ஏற்றிட வேண்டிய தாங்கவியலாப் பணிச்சுமை, மிகக் குறைவான சம்பளம், குடும்பத்தாரின் தேவைகள் - குழந்தைகளின் கல்வி - நாளும் அதிகரித்து வரும் விலைவாசி போன்றவற்றினால் ஏற்படும் நெருக்கடி - மன அழுத்தம், மேலதிகாரிகள் நடத்தும் முறையால் உண்டாகும் தன்மானச் சிதைவு ஆகியவற்றால் தமிழகக் காவல் துறையினர் குறிப்பாக அடுத்தடுத்துச் சாதாரண நிலையில், காவலர் முதல் துணைக் கண்காணிப்பாளர் வரை பணியாற்றுவோர், ஒவ்வொரு நாளும் கடக்க வேண்டிய பிரச்சினைகளும், அனுபவித்துத் தீர வேண்டிய அவலங்களும் எண்ணிலடங்காதவை. பாதிக்கப்படும் பொது மக்கள், ஆதிக்கம் செலுத்தும் மேலதிகாரிகள், இன்னலுறும் குடும்பத்தினர் என்ற முக்கோணத்திற்குள் சிக்கித் தவித்திடும் சாதாரண நிலைக் காவல் துறையினரை அரசு, காக்கும் கரங்களாக இருந்து அரவணைத்து, கடமையாற்றிட அனுமதித்திட வேண்டும்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications