காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால்…. கருணாநிதி எச்சரிக்கை

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
திமுக தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக் கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.
பிரதமருக்குப் பதிலாக வேறு யாராவது இந்தியாவிலிருந்து சென்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டால்?
இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றால், இந்தியாவைச் சார்ந்த துரும்பு கூட இந்த மாநாட்டிற்குச் செல்லக் கூடாது என்று தான் பொருள். சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினைக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தமிழ் மக்களின் உணர்வு களுக்கேற்ப நீங்களும் அதனை ஆதரித்தீர்கள். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அதனை ஆதரித்தார்கள்.
அந்த உணர்வுகளுக்கு மாறாக மத்தியில் காங்கிரஸ் கட்சி இப்படியொரு முடிவெடுக்கிறதே?
வினை விதைத்தவர்கள், வினை அறுப்பார்கள்!
டெசோ அவசரமாகக் கூட்டப்படுமா?
டெசோ கூட்டம் நடைபெற்றுத் தான் முதன் முதலில் இதற்கான தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றினோம். அதை மீறித்தான் இப்போது காங்கிரஸ் கட்சி அல்லது பிரதமர் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன்.
டெல்லியிலிருந்து வருகின்ற தகவல், காங்கிரஸ் கட்சியின் முடிவினை எதிர்த்து மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ராஜினாமா செய்யப்போவதாகச் சொல்லப்படுகிறதே?
அதைப்பற்றி எனக்குத் தெரியாது. செய்தி வந்த பிறகு தான் அதைப் பற்றி கருத்து சொல்ல முடியும்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications