காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தீபிகா–ஜோஷ்னாவுக்கு கருணாநிதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தீபிகா பலிக்கலுக்கும், ஜோஷ்னா சின்னப்பாவிற்கும் திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காமன்வெல்த் போட்டியில் ஒருசில ஆண்டுகளுக்கு முன்புதான் ஸ்குவாஷ் விளையாட்டு அறிமுகம் ஆனது. அந்த விளையாட்டில் முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த தீபிகா பலிக்கலும், ஜோஷ்னா சின்னப்பாவும், பெண்களுக்கான இரட்டையர் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியை தரக்கூடியதாகும். அவர்கள் இருவருக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications