ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ள டெண்டுல்கருக்கு வாழ்த்துகள்.. கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 200வது டெஸ்டிலிருந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு எனது வாழ்த்துகள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் கேள்விகள் கேட்டவர்களுக்கு பதிலளித்துள்ளார் கருணாநிதி.

ரத்தினச் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் அவர் பதிலளித்துள்ளார். அந்தக் கேள்விகளும், பதில்களும்....

சச்சினுக்கு வாழ்த்துகள்

சச்சினுக்கு வாழ்த்துகள்

கேள்வி - இந்திய கிரிக்கெட் வீரர், உலக கிரிக்கெட் ஜாம்பவான், MASTER BLASTER என்று அனைவராலும் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 200 வது டெஸ்டிலிருந்து ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளார், கிரிக்கெட் ரசிகராக நீங்கள் இவருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் ?

கருணாநிதி: வாழ்த்துகள்

நான் என்ன சொல்ல...

நான் என்ன சொல்ல...

கேள்வி - இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையும் இருளில் மூழ்கி ஸ்தம்பித்ததே? தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு எந்த வொரு நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லையே, இதனை பற்றி உங்களது கருத்து?

கருணாநிதி: ஜெயலலிதா அரசு நிர்வாகத்தில் தமிழ்நாடே கருத்து கிடைக்கிறது, இதில் நான் என்ன புதிதாக கருத்து சொல்ல.

பாருங்கள்

பாருங்கள்

கேள்வி- டெசோவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் ?

கருணாநிதி: பொறுத்திருந்து பாருங்கள்

நிச்சயமாக

நிச்சயமாக

கேள்வி -அமைச்சர்கள் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவது தவறுகள் அதிகம் நடப்பதாக அரசே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக எடுத்தும் கொள்ளலாமா ?

கருணாநிதி: நிச்சயமாக

குழப்பம்

குழப்பம்

கேள்வி - சமீப காலமாக இந்திய நாட்டில் தெலுங்கானா பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது, இதனைப் பற்றி உங்களது கருத்து ?

கருணாநிதி: காலத்தில் செயல்படாததால் ஏற்பட்ட குழப்பங்கள்

இப்போது போலத்தான்...

இப்போது போலத்தான்...

கேள்வி - வரும் தேர்தலில் ஊடகத்தின் பங்கு எப்படி இருக்கும் ?

கருணாநிதி: என்னுடைய நம்பிக்கை ஊடகத்தின் பங்கு இப்போது இருப்பது போலத் தான் இருக்கும்.

அவதிப்படுவார்கள்

அவதிப்படுவார்கள்

கேள்வி - இளைஞர்களின் நம்பிக்கையின்மை வன்முறைக்கு அரசின் நடவடிக்கை தான் காரணம் என்கிறார்களே?

கருணாநிதி: பொதுவாக மக்களை நல்வழியில் எடுத்துச் செல்கின்ற பொறுப்பு அரசுக்கு உண்டு, அந்தப் பொறுப்பை தட்டிக் கழித்தால் இளைஞர்கள் மாத்திரமல்ல எல்லா மக்களுமே அவதிப் படுவார்கள்.

எதிர்பார்க்கிறோம்

எதிர்பார்க்கிறோம்

கேள்வி- ஏற்காடு தேர்தலில் ஆணையச் செயற்பாடு எப்படி இருக்கிறது ?

கருணாநிதி: தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்துக் கொள்ளும் என்று எதிர்ப் பார்க்கிறோம்

எதிர்பார்த்ததுதான்

எதிர்பார்த்ததுதான்

கேள்வி - தியாகுவின் உண்ணாவிரதத்தை முதல்வர் அலட்சியப் படுத்தி விட்டாரே ?

கருணாநிதி: எதிர்ப்பார்த்ததுதான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+