அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு தடையா.. கொந்தளிக்கும் கருணாநிதி
சென்னை: அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு தடை விதித்துள்ள உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு தி.மு.க. தலைவா் கருணாநிதி கண்டனம் தொிவித்துள்ளாா்.
இந்த தீா்ப்பு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் கருணாநிதி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது....

உச்ச நீதிமன்றம் உத்தரவு
நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் உட்பட ஊடகங்களில் அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர்,பிரதமர் மற்றும் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்...முதலமைச்சர் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மாநில உரிமைகளை பறிக்கும் செயல்
அரசு சார்பில் செய்யப்படுகின்ற விளம்பரங்களில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் படங்களையும், குடியரசுத் தலைவரின் படங்களையும் வெளியிடலாம், மாநில முதலமைச்சர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு மாநில உரிமைகளையெல்லாம் பறிக்கின்ற செயலாகும்.

முதல்வர்களுக்குத் தான் மக்கள் முக்கியத்துவம்
இந்திய அரசியல் சட்டத்தின்படி, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கும், மாநில முதல் அமைச்சர்களுக்கும் சமமான அந்தஸ்து தான். இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களிலே பிரதமரை விட அந்தந்த மாநில முதல் அமைச்சர்களுக்குத் தான் பொது மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

ஆதரவோடு தான் முதல்வர் தோ்வு
பிரதமரும் பெரும்பான்மை அரசியல் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுவர் தான். அதைப் போலவே குடியரசுத் தலைவரும் அரசியல் கட்சியின் ஆதரவைப் பெற்றவர் தான். மாநிலங்களில் பெரும்பான்மை அரசியல் கட்சியின் ஆதரவோடு தான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அடிப்படைக் காரணங்கள் உண்டு
எனவே அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசு தலைவர் படங்கள் இடம்பெறுவதற்கு என்ன அடிப்படைக் காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் மாநில முதல்வரின் படம் இடம் பெற வேண்டும் என்பதற்கும் உண்டு.

மக்கள் புரிந்து கொள்ளவே விளம்பரம்
கல்வியறிவு படைத்த மக்கள் குறைவாக உள்ள இந்தியா போன்ற நாட்டில், பக்கம் பக்கமாக வார்த்தைகளைக் கொட்டி விளக்குவதைக் காட்டிலும் உருவப் படம் ஒன்றை வெளியிட்டு, சுருக்கமான வாசகங்களை வெளியிடுவதன் வாயிலாகவே விளம்பரத்தின் நோக்கத்தினை மக்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

நீண்டகால நடைமுறை
இந்திய ஜன நாயகத்தில் மத்திய நிர்வாகத்தின் உருவகமாக பிரதமரையும், மாநில நிர்வாகத்தின் உருவகமாக முதல்வரையும் முன்னிலைப்படுத்துவது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவது மட்டுமல்லாமல், இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும்.

இது தான் என்னுடைய கருத்து
எனவே அரசு விளம்பரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்களின் படங்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்பது தான் என்னுடைய கருத்தாகும்.
இவ்வாறு தி.மு.க. தலைவா் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications