தமிழக மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது... கருணாநிதி
சென்னை : மின் வெட்டு குறித்து தவறான தகவல்களைக் கூறி தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

மின்சார உற்பத்தி பற்றியும், மின்வெட்டு பற்றியும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டு மக்களை எப்படி உண்மைக்கு மாறான செய்திகளை அடுக்கடுக்காகச் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள் என்று அவ்வப்போது நாம் எடுத்துக் கூறியே வருகிறோம்.
அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு வரும் தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அமைச்சர் உணரும் காலம் அண்மையிலே தான்; வெகு தொலைவில் இல்லை!
இன்னும் சொல்லப்போனால், 24-11-2013 தேதிய நாளிதழில் "தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தித் திட்டம் அம்பேல்"என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளி வந்தது. அந்தச் செய்தியில், "இந்தத் திட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாலும், அதைக் கவனிக்க மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆர்வம் காட்டாததாலும் சூரிய மின் சக்தி சாதன உற்பத்தியாளர்கள், முதல்வரைச் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்" என்றும் அப்போதே எழுதியது.
ஒட்டுமொத்தமாக அமைச்சரின் பதிலில் தற்போது மின்வெட்டு இல்லை என்றும், மின் தடைதான் உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார். இதிலிருந்து மின்தடை என்ற தொழில்நுட்பப் பெயரால் எதார்த்தத்தில் தொடர்ந்து நிலவிவரும் மின்வெட்டு என்பதை இல்லை என்பதைப் போலச் சாமர்த்தியமாகச் சொல்லி நிரூபிக்கப் பார்க்கிறார்கள். மின்வெட்டு இருக்கிறதா இல்லையா என்பதை நானல்ல, ஏடுகளில் வெளிவந்த செய்தியையே தெரிவித்துவிட்டேன்.
ஏன், நேற்று வெளிவந்த நாளிதழில் "மின்வெட்டில் இருளில் மூழ்கிய ஜி.எச்., மெழுகு வர்த்தி ஏற்றி சமாளித்த நோயாளிகள் என்ற தலைப்பில் ஒரு செய்தியும், "மூன்று மணி நேர மின்வெட்டால் அவதி - 2,170 மெகாவாட் பற்றாக்குறை" என்ற தலைப்பில் ஒரு செய்தியும் வெளிவந்துள்ளன.
இப்படி நாட்டில் நடப்பதையெல்லாம் மறைத்துவிட்டு மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்வதால் மின்வெட்டால் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் குறைந்து விடுமா? சிலரைப் பல நாள் ஏமாற்றலாம், பலரைச் சிலநாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications